Sunday, October 9, 2011

தேர்தல் விழிப்புணர்வுப் பேரணி


தேர்தல் விழிப்புணர்வுப் பேரணி

 

அரியலூர், ஏப். 1: அரியலூர் மாவட்டம், சுண்டக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில், தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, விழிப்புணர்வுப் பேரணி அண்மையில் நடத்தப்பட்டது.

 

பேரணியை பள்ளித் தலைமை ஆசிரியர் செ. அருள்ராஜ் தலைமை வகித்து, தொடக்கி வைத்தார். பேரணியில் பங்கேற்ற மாணவர்கள், வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

 

பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகளிóன் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.

 

பேரணியில் இயற்பியல் முதுகலை ஆசிரியர் பி. பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

 

முன்னதாக, பட்டதாரி ஆசிரியர் சு. முத்துராமலிங்கம் வரவேற்றார். பட்டதாரி ஆசிரியை ஜா.ஆ. பாலின் நன்றி கூறினார்.

 

 

 


Thursday, January 6, 2011

நமக்காக தனியாக ஒரு Google Mailing Group

 நமக்காக தனியாக ஒரு Google Mailing Group ஆரம்பித்துள்ளோம்.
அதில் தங்களை இணைத்துக்கொண்டு தங்களின் முழு பங்களிப்பையும் வழங்க அன்புடன் வேண்டுகிறேன்.



Google Groups

Sundakkudi Govt Higher Secondary School Alumni Association

Visit this group


குழுமத்தில் இணைய கீழ்க்கண்ட இடத்தில் தங்கள் மெயில் (E-MAIL ID) யை கொடுத்து <SUBSCRIBE> பட்டனை கிளிக் செய்யவும்.


Google Groups

Subscribe to Sundakkudi Govt Higher Secondary School Alumni Association

Email:

Visit this group

Thursday, December 30, 2010

சுண்டக்குடி அரசுப் பள்ளி மாணவிகள் 71 பேருக்கு இலவச சைக்கிள் அளிப்பு

சுண்டக்குடி அரசுப் பள்ளி மாணவிகள் 71 பேருக்கு இலவச சைக்கிள் அளிப்பு

அரியலூர், டிச. 29: அரியலூர் மாவட்டம், சுண்டக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 71 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியர் அருள்ராஜ் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் சுரேஷ், பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அரியலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பாளை து. அமரமூர்த்தி பங்கேற்று, 71 மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசியது:

மத்திய, மாநில அரசுகள் கல்விக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி, அதற்காக நிதியை ஒதுக்கியுள்ளது.

கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், கல்விக்காக மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சலுகைகளைப் பயன்படுத்தி வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றார் அமரமூர்த்தி.

விழாவில் குருவாடி ஊராட்சித் தலைவர் வீர. ரவி, சிதம்பரம் மக்களவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுப. சுந்தரசோழன், அரியலூர் சட்டப்பேரவை இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், திருமானூர் ஒன்றியக் குழுத் தலைவர் நடராஜன் பொதுச் செயலர் தேவர், கோபி உள்ளிடடோர் கலந்து கொண்டனர்.

Wednesday, December 1, 2010

First Post

Dear Friends,

Please mail to me : sghss.alumni@gmail.com

Regards
Sundakkudi GHSS Alumni Association.